காவேரி மருத்துவமனையில் விஜய்
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஐந்து நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ஐந்து நாட்களில் அவருடைய உடல்நிலை பின்னடைவில் இருந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவ்வப்போது வரும் மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை அகில இந்திய அரசியல் தலைவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து அவருடைய குடும்பத்தினர்களிடம் கேட்டறிந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றிரவு ரஜினிகாந்த், காவேரி மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலின் மற்றும் அழகிரியிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார்
இந்த நிலையில் சற்றுமுன்னர் காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விஜய் வருகை தந்துள்ளார். கருணாநிதியின் உடல்நிலை குறித்த விசாரித்த பின்னர் அவர் சில நிமிடங்களில் திரும்பி சென்றார். இன்று காவேரி மருத்துவமனை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com