கேப்டன் வீட்டிற்கு திடீர் விசிட் செய்த தளபதி விஜய்.. ஏஐ காட்சிகள் குறித்து ஆலோசனையா?

  • IndiaGlitz, [Tuesday,August 20 2024]

தளபதி விஜய் நேற்று மறைந்த கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தளபதி விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஒரு சின்ன கேரக்டரில் நடித்துள்ளதாகவும், ஏஐ டெக்னாலஜி மூலம் விஜயகாந்த் காட்சிகள் உருவாக்கப்பட்டு பிரேமலதாவிடம் அனுமதியும் பெற்று விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ’கோட்’ படத்தின் புரமோஷன் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் நேற்று திடீரென கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு தளபதி விஜய் சென்றார். அவருடன் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர்களும் சென்று பிரேமலதா மற்றும் அவரது மகன்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது பிரேமலதாவுக்கு விஜய் பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மாலை மரியாதை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி விஜயகாந்த் மகன்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த சந்திப்பின்போது ’கோட்’ படத்தில் விஜயகாந்த் காட்சிகள் குறித்து பிரேமலதாவிடம் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

ZEE5 இன் மலையாள ஆந்தாலஜி தொகுப்பு  'மனோரதங்கள்' வெளியீட்டு விழா.. மோகன்லால் பங்கேற்பு..!

ZEE5 இன் 'மனோரதங்கள்,' மலையாள சினிமாவின் சிறந்த திறமைகளை முன்னிலைப்படுத்தும் ஒன்பது வசீகரிக்கும் கதைகளுடன் M.T வாசுதேவன் நாயரின் கற்பனை உலகத்துக்கான பயணமாக அமைந்துள்ளது.

அடுத்த ஆக்சன் படம்.. தயாரிப்பாளர், இயக்குனர் பெயரை அறிவித்த சூரி..!

நடிகர் சூரி தனது அடுத்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பெயரை தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை பிரியங்கா மோகனுக்கு பட்டம் வழங்கிய நானி.. என்ன பட்டம் தெரியுமா?

நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்த 'சூர்யாவின் சனிக்கிழமை' என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின்

சீரியல் நடிகைக்கு 2வது திருமணம்.. கேரள தொழிலதிபரை கரம் பிடித்தார்..!

தமிழ் டிவி சீரியல்களிலும் சில படங்களிலும் நடித்துள்ள நடிகை, கேரள தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தவெக கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய்... தேதி இதுதான்..!

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்யும் தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.