சினிமாவை விட்டுட்டு ஐஸ் விற்கும் விஜய் பட நடிகர்..! வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,February 08 2023]

சினிமாவில் விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் தற்போது ஐஸ் டிரக்கில் ஐஸ்கிரீம் விற்கும் நான் வியாபாரி ஆக மாறி உள்ளார்.

விஜய், சூர்யா நடித்த ’பிரண்ட்ஸ்’ விஜயகாந்த் நடித்த ’வானத்தைப்போல’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பரத். அதன் பிறகு இவர் 'சகலகலா பூம்பூம்’ என்ற சீரியலில் நடித்தார் என்பதும் அந்த சீரியல் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும் அதன்பின் கல்லூரி செல்ல ஆரம்பித்து எம்.பி.ஏ பட்டதாரியான பரத், சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட விலகிவிட்டார். அஜய் ஞானமுத்து இயக்கிய ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது என்றாலும் அதன் பிறகு சினிமாவை விட்டுவிட்டு ஐஸ்கிரீம் தொழிலை தொடங்கினேன் என்று நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.

’கார்ட்டூன் படங்களில் ஐஸ்கிரீம் ட்ரக் இருப்பதை நான் சிறுவயதில் பார்த்திருப்பேன். அதுபோல் சென்னையில் இல்லையே என்று நான் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தான் நாம் ஏன் இதை செய்யக்கூடாது என்று யோசித்தேன். புதிதாக ஐஸ்கிரீம் டிரக்கை தொடங்கி உள்ளேன். என்னிடம் எல்லா விதமான ஐஸ்கிரீம் வகைகளும் உள்ளன. குறிப்பாக பால் ஐஸ் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் சிறுவயது நினைவுகளை என்னிடம் பகிர்ந்து கொள்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான பரத் தற்போது ஐஸ்கிரீம் வியாபாரி ஆகி நல்ல முறையில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பேட்டியின் முழு வீடியோ இதோ: