வேகமாக பரவும் விஜய்யின் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,October 21 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு பாஜக தலைவர்களால் இப்படி ஒரு இலவச விளம்பரம் கிடைக்கும் என்று படக்குழுவினர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நேற்று கூட திரையரங்குகளில் ஒருசில இருக்கைகள் காலியாக இருந்த நிலையில் இன்றும் நாளையும் சென்னையில் உள்ள அனைத்து காட்சிகளுக்கும் 'மெர்சல்' படத்திற்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்துவிட்டன

இந்த நிலையில் பிரச்சனைக்கு காரணமான படத்தின் இறுதிக்காட்சியில் விஜய் பேசும் ஜிஎஸ்டி வசன வீடியோ டுவிட்டர், பேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றன. இந்த வீடியோ படத்தை பார்க்க தூண்டுவதே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்க போகிறது.

விஜய்யின் வெற்றி படங்களில் ஒன்றாக இருக்க வேண்டிய 'மெர்சல்' படத்தை பாஜக தலைவர்கள் சூப்பர் ஹிட் படமாக மாற்றியது மட்டுமின்றி தங்களுக்கு இருந்த ஒருசில தமிழக வாக்காளர்களையும் இழந்துவிட்டனர் என்பதே இந்த படத்தின் உண்மையான ரிசல்ட்டாக உள்ளது.

More News

'மெர்சல்' பட விவகாரம்: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்களுக்கு பாஜகவினர் எதிர்ப்பும் மிரட்டலும் தெரிவித்தபோது கோலிவுட் திரையுலகமே கொந்தளித்து

மெர்சலுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலின்

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு எந்த நேரத்திற்கு தமிழிசை செளந்திரராஜன் எதிர்ப்பு தெரிவித்தாரோ தெரியவில்லை, தமிழகத்தில் இருந்த ஒருசில செல்வாக்கும் அந்த கட்சிக்கு தற்போது இல்லாமல் போய்விட்டது.

மெர்சலுக்காக மக்களே குரல் கொடுக்க வேண்டும்: விஜய்சேதுபதி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்களை பாஜகவினர் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் இந்த படம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டிருக்காது.

அப்படி போடு: மெர்சலுக்கு ராகுல்காந்தியும் ஆதரவு

ஜிஎஸ்டி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் நூற்றுக்கணக்கான கூட்டங்கள் போட்டு விளக்கினர். கூட்டங்களில் வராத விழிப்புணர்வு ஒரு படத்தில் ஏற்பட்டுவிட்டது என்றால் அதுதான் 'மெர்சல்'

ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கி விஜய் நடிக்க தயாரா? மருத்துவர் சங்கம் கேள்வி

விஜய்யின் 'மெர்சல்' படத்தின் ஜிஎஸ்டி வசனங்களுக்காக ஒருபக்கம் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற டாக்டர்கள் குறித்த காட்சிகளுக்கு இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர்