அமெரிக்காவில் ஆலோசனை செய்யும் விஜய்-வெங்கட் பிரபு.. காரணம் இதுதானா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 68’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விஜய், வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ஒரு முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது ‘தளபதி 68’ விஜய்யின் தோற்றத்தை 3D VFX டெக்னாலஜியில் அமைக்கப்பட இருப்பதாகவும் அதற்கான ஆலோசனையில் தான் மூவரும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இதேபோல ஷாருக்கானின் ‘ஃபேன்’ படத்திற்கும் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ படத்திற்கும் உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது ‘தளபதி 68’ படத்திற்கும் அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் ’தளபதி 68’ திரைப்படத்தில் விஜய்யுடன் மாதவன், பிரபுதேவா, ஜோதிகா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com