கனவுகளுடன் வந்தார், கனவு முடிந்ததும் கிளம்பிவிட்டார்: விஜய்வசந்த் உருக்கமான பதிவு

தனது தந்தை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்கு பல கனவுகளுடன் வந்தார் என்றும் அவர் தன்னுடைய கனவு அனைத்தையும் நனவானவுடன் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுவிட்டார் என்றும் வசந்தகுமாரின் மகன் நடிகர் விஜய் வசந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

பிரபல தொழிலதிபரும் கன்னியாகுமரி தொகுதி எம்பியுமான வசந்தகுமார் திடீரென உடல்நலக் குறைவால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காலமானார். அவருடைய மறைவு அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது இறுதி சடங்கு நேற்று அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில் தனது தந்தை குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்த, தனது தந்தை இறந்தவுடன் இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட நடிகரும் வசந்தகுமாரின் மகனுமான விஜய்வசந்த் இதுகுறித்து மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

1970 ஆம் ஆண்டு எனது தந்தை வெறும் கனவுகளுடன் சென்னை வந்தார். 50 ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒ௫ உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊ௫க்கு கொண்டு வந்து சேர்த்தேன். தாங்கள் என் தந்தையை நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி.

விஜய் வசந்தின் இந்த டுவிட்டர் பதிவில் பெருந்தலைவர் காமராஜர் உடன் வசந்தகுமார் சிறுவயதில் இருந்த புகைப்படத்தையும் இணைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனி விமானம் மூலம் காதலருடன் கொச்சி சென்ற நயன்தாரா: என்ன காரணம்?

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானம் மூலம் திடீரென கொச்சி சென்று உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

முதலில் அம்மா, அப்புறம் அப்பா: கொரோனா மரணம் குறித்து தமிழ் நடிகையின் அதிர்ச்சி தகவல்

தனது நெருங்கிய தோழி ஒருவரின் அம்மா முதலில் கொரோனாவுக்கு பலியானதாகவும் அதனை அடுத்து நேற்று அவருடைய தந்தையும் கொரோனாவுக்கு பலியானதாகவும் தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் 

கனமழையில் இடிந்து விழுந்த சுவர்- 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!!!

தென்மேற்கு பருவமழையால் கடந்த சில வாரங்களாக வட இந்திய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

இரட்டை குழந்தைகள் இறந்த நிலையில் விவசாயிக்கு கொரோனா!!! மனஅழுத்தத்தால் ஏற்பட்ட விபரீதம்!!!

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனைக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

இபாஸ் ரத்து, மெட்ரோ ரயில், பேருந்து இயங்கும்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகள்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இபாஸ் கண்டிப்பாக தேவை என்ற நடைமுறை இருந்த நிலையில், சற்று முன் வெளியான அறிவிப்பில் தமிழகத்தில் மாவட்டங்க