கனவுகளுடன் வந்தார், கனவு முடிந்ததும் கிளம்பிவிட்டார்: விஜய்வசந்த் உருக்கமான பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தனது தந்தை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்கு பல கனவுகளுடன் வந்தார் என்றும் அவர் தன்னுடைய கனவு அனைத்தையும் நனவானவுடன் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுவிட்டார் என்றும் வசந்தகுமாரின் மகன் நடிகர் விஜய் வசந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கத்துடன் கூறியுள்ளார்.
பிரபல தொழிலதிபரும் கன்னியாகுமரி தொகுதி எம்பியுமான வசந்தகுமார் திடீரென உடல்நலக் குறைவால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காலமானார். அவருடைய மறைவு அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது இறுதி சடங்கு நேற்று அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் தனது தந்தை குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்த, தனது தந்தை இறந்தவுடன் இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட நடிகரும் வசந்தகுமாரின் மகனுமான விஜய்வசந்த் இதுகுறித்து மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
1970 ஆம் ஆண்டு எனது தந்தை வெறும் கனவுகளுடன் சென்னை வந்தார். 50 ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒ௫ உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊ௫க்கு கொண்டு வந்து சேர்த்தேன். தாங்கள் என் தந்தையை நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி.
விஜய் வசந்தின் இந்த டுவிட்டர் பதிவில் பெருந்தலைவர் காமராஜர் உடன் வசந்தகுமார் சிறுவயதில் இருந்த புகைப்படத்தையும் இணைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1970 ஆம் ஆண்டு எனது தந்தை வெறும் கனவுகளுடன் சென்னை வந்தார். 50ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒ௫ உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊ௫க்கு கொண்டு வந்து சேர்த்தேன். தாங்கள் என் தந்தையை நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி. #missyoudad#vasanthakumar pic.twitter.com/rfxDZ11YLG
— VijayVasanth (@iamvijayvasanth) August 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com