தமிழக காங்கிரஸில் முக்கிய பதவியை பெற்ற தமிழ் நடிகர்!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில மாதங்களாக பல திரையுலக பிரமுகர்கள் பாஜகவிற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழ் நடிகர் ஒருவருக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் அவர்கள் காலமானார். இந்த நிலையில் அவரது மகனும் தமிழ் நடிகருமான விஜய் வசந்த், தந்தை போட்டியிட்டு வென்ற கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் அரசியலில் தொடர்ந்து ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது
இந்த நிலையில் சற்று முன் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குறித்த பட்டியல் ஒன்று வெளியானது. அதில் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளராக நடிகர் விஜய் வசந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments