விஜய் கூறிய 'நண்பி' தமிழ் சொல்லா? நெட்டிசன்கள் விவாதம்
- IndiaGlitz, [Friday,October 05 2018]
விஜய் வாயை திறந்து என்ன கூறினாலும் அது சர்ச்சைக்குரியதாக மாறிவிடும் நிலை கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இம்மாதம் 2ஆம் தேதி சென்னையில் நடந்த 'சர்கார்' பாடல்கள் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியபோது, 'நண்பா, நண்பி' என்று தனது ரசிகர்களை அழைத்தார். இதில் 'நண்பி' என்ற வார்த்தை தற்போது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
'நண்பி' என்பது தமிழ் வார்த்தையே இல்லை என்றும், தமிழில் இல்லாத ஒரு வார்த்தையை விஜய் பயன்படுத்தியுள்ளதாகவும் ஒருசில நெட்டிசன்கள் கூறினர். இதற்கு பதிலடி கொடுத்த இன்னொரு தரப்பு, 'நண்பி என்னும் சொல் வெகுகாலமாக தமிழில் உள்ளது என்றும், பெரும் கவிஞர்கள் இந்த சொல்லை பயன்படுத்தியுள்ளனர்
என்றும், பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய ஒரு நூலின் பெயரே 'நண்பா நண்பி' என்றும் பதிலடி கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாடலாசிரியர் பா.விஜய் கூறியபோது, 'திரை உலகின் தளபதி விஜய் அவர்கள் சொன்ன நண்பி என்ற சொல், தமிழ் இலக்கிய பயன்பாட்டுச் சொல்தான் என்றும், தமிழ் எழுத்துக்களின் கூட்டில் புதிய வார்த்தை உத்திகளின் வடிவமைப்புகள் வரவேற்கப்பட வேண்டியவை என்றும் கூறியுள்ளார்.
திரை உலகின் தளபதி @actorvijay விஜய் அவர்கள் சொன்ன நண்பி என்ற சொல், தமிழ் இலக்கிய பயன்பாட்டுச் சொல்தான். தமிழ் எழுத்துக்களின் கூட்டில் புதிய வார்த்தை உத்திகளின் வடிவமைப்புகள் வரவேற்கப்பட வேண்டியவைhttps://t.co/Q3ajkgroLo
— PA.VIJAY (@poetpaavijay1) October 4, 2018