தவெக தலைவர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தி.. என்ன ஆச்சு?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகியான திரு. சரவணன் திடீரென உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த செய்தி அக்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரது மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தவெகவை சேர்ந்த சரவணன், சித்தன்குடியைச் சேர்ந்தவர், அவருக்கு ஒரு மனைவியும் மகனும் உள்ளனர். கல்லூரி நாட்களில் இருந்து நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்த அவர், விஜய் ரசிகர் மன்றத்தில் செயற்பட்டுள்ளார். சரவணன், நடிகர் விஜய் கட்சியின் புதுவை மாநிலச் செயலாளர் மட்டுமன்றி, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நெருக்கமானவராகவும் இருந்தார்.
வரவிருக்கும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் ஏற்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த சரவணனின் திடீர் மறைவு அவரது கட்சி தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும்…
— TVK Vijay (@tvkvijayhq) October 22, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com