மே 28ஆம் தேதி இதை செய்ய வேண்டும்: விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய அறிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மே 28ஆம் தேதி தனது கட்சியின் தொண்டர்கள் ஒரு முக்கிய விஷயத்தை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தளபதி விஜய் தொடங்கியது முதலில் பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக பல இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அது மட்டும் இன்றி நூலகம், மருந்தகம் உட்பட பல உபயோகமான செயல்களும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அறிக்கை சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அதில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி ,உலக பட்டினி தினம் வருகிற மே 28ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மாவட்ட அணி, நகரம், ஒன்றியம், கிளை மற்றும் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி மக்கள் நல பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Thalaivar @actorvijay Sir.!@tvkvijayhq @TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/ppCRgvz1B4
— N Anand (@BussyAnand) May 26, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com