குசும்பு ஜாஸ்தி: போட்டியாளர் மிக்சர் சாப்பிடும் போது ஓட்டு போட சொன்ன விஜய் டிவி..!

  • IndiaGlitz, [Friday,November 17 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிக்பாஸ் அவ்வப்போது போட்டியாளர் சரவணன் விக்ரமை கலாய்ப்பதை பார்த்து வருகிறோம். சரவணன் விக்ரம் ’நான் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர்’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது அவரை பிக் பாஸ் கலாய்த்து, அவர் குறித்து கூறும் காட்சிகள் நகைச்சுவையாக உள்ளது.

குறிப்பாக மீட்டிங் நடந்து கொண்டிருந்த போது சரவணனை கூப்பிட்டு கதவை சாத்துங்கள் என்று கூறியது, பூர்ணிமா, நான் தான் டைட்டில் வின்னர் என கூறியபோது விக்ரமை பெரிதுபடுத்தி காட்டியது ஆகியவற்றை கூறலாம்.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின்போது சரவணன் விக்ரம் மிக்சர் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ’இந்த போட்டியில் விக்ரம் சரவணன் தொடர வேண்டும் என்றால் அவருக்கு வாக்களியுங்கள்’ என்ற டிஸ்ப்ளே மெசேஜ் வருகிறது. விஜய் டிவிக்கு குசும்பு ஜாஸ்தி என்றும் சரவணன் விக்ரமை கலாய்ப்பதே வேலையாக இருக்கிறது என்றும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே விக்ரம் ஒரு சிறந்த போட்டியாளர் என மாயா கூறியதை பார்வையாளர்கள் கலாய்த்து வரும் நிலையில், விஜய் டிவியும் பிக்பாஸும் மாறி மாறி அவரை கலாய்ப்பது எங்கே போய் முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.