கணவருக்கு அன்பு முத்தம் கொடுத்துவிட்டு பிக்பாஸ் செல்லும் நடிகை: ரொமான்ஸ் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கணவருக்கு அன்பு முத்தம் கொடுத்துவிட்டு நடிகை மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
விஜய் டிவியில் கடந்த ஒரு வாரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஏற்கனவே 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது தெரிந்ததே.
ஜிபி முத்து, ஜனனி, தனலட்சுமி உள்ளிட்டோர் முதல் வாரத்திலேயே சிக்சர் அடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்து விட்ட நிலையில் விஜய் டிவியின் சீரியல் நடிகை மற்றும் தொகுப்பாளினி மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன் தனது கணவரிடம் விடைபெற்று விட்டு அன்பு முத்தம் கொடுக்கும் காட்சிகளின் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மைனா நந்தினி ஜாலியானவர் மற்றும் கலகலப்பானவர் என்பதால் அவர் பிக்பாஸ் வீட்டில் சென்ற பிறகு நிகழ்ச்சி இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments