ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும்! சூப்பர் சிங்கர் ஜூனியர் தனது 10வது சீசன்..
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் சிங்கர் ஜூனியர் தனது 10வது சீசனுடன் ஒளிபரப்பாகவுள்ளது!
நவம்பர் 16, 2024 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும். 6 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களது பாடல் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாகத் திகழும் சூப்பர் சிங்கர் ஜூனியர், இப்போது 10வது சீசனுடன் மீண்டும் மக்களின் மனதில் கொண்டிருக்கும் உற்சாகத்தை மீண்டும் மெருகூட்ட வருகிறது.
முதல் முறையாக, இசை மேதை டி. இமான் சீசன் 10ல் புதியதாக இணைந்து கே.எஸ். சித்ரா மற்றும் மனோவுடன் பாடகர்களுக்கு வழிகாட்டும் நடுவர்களில் இணைந்துள்ளார்.
நிகழ்ச்சியின் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே மீண்டும் தொகுப்பாளர்களாக இணைந்துள்ளனர்.
இதனை முன்னிட்டு, சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 தனது ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒவ்வொரு ப்ரோமோவும், ‘ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும்! என்ற வரிகளை உள்ளடக்கியது, இதன் மூலம் இதற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.
2006-ஆம் ஆண்டு முதல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாக திகழ்ந்து வருகிறது. கிருஷ்ணமூர்த்தி, அல்கா அஜித், ஆஜீத், ஸ்பூர்த்தி, ப்ரிதிகா, ஹ்ரிதிக், கிரிஷாங் மற்றும் ஸ்ரீநிஷா போன்ற முன்னாள் வெற்றி பெற்ற பங்கேற்பாளர்கள் இன்று புகழ்பெற்ற பின்னணி பாடகர்களாக திரையுலகில் பிரகாசிக்கின்றனர்.
தங்கள் திறமையை உலகுக்கு அறிமுகப்படுத்திய இந்த மேடையில், பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரகுமான், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருடன் பணிபுரியும் வாய்ப்பும் கொடுத்துள்ளது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வரும் நவம்பர் 16 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கண்டுகளிக்க தவறாதீர்கள்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com