விஜய் டிவி ரக்சன் நடிக்கும் புதிய திரைப்படம்: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Saturday,July 16 2022]

விஜய் டிவியில் பணிபுரியும் பிரபலங்கள் பலர் பெரிய திரையிலும் நடித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் விஜய் டிவியின் ’குக் வித் கோமாளி’ உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் ரக்சன் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

விஜய் டிவியில் ’கலக்கப்போவது யாரு’ ‘குக் வித் கோமாளி’ ’ஸ்டார்ட் மியூசிக்’ உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் ரக்சன். இவர் துல்கர் சல்மான் நடித்த ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் இவரது நடிப்பிற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே.

 

இந்த நிலையில் தற்போது இவர் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்த நிலையில் இந்த பூஜை குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.  பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்க,இரா கோ யோகேந்திரன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.

கண்ணும் கண்ணும் கொள்ளைடித்தால் படத்தில் தனது தனித்த, நகைச்சுவை நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த நடிகர் ரக்‌ஷன், நாயகனாக புதிய படத்தில் அறிமுகமாகிறார். உணர்வுபூர்மான காதல், நட்பு, உறவுகளை மையமாக கொண்டு, அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுது போக்கு திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

கலக்கபோவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க்ஸ்டர் ராகுல், மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு, மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைக்கிறார். தாமரை பாடல்வரிகளை எழுதுகிறார். கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்ய, ‘அர்ஜூன் ரெட்டி’ படப்புகழ் செஷாங் மாலி படத்தொகுப்பு பணிகளை செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு, கன்னியாகுமரி  மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக்,  டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது

More News

பிரதாப் போத்தனின் 31 வயது மகள் யார் தெரியுமா? இந்த துறையில் இவர் பிரபலமாம்!

தமிழ் திரையுலகின் சீனியர் நடிகர் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தன் நேற்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானதை அடுத்து அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்தது.

ரஜினி வெளியிட்ட தமிழக முதல்வர் நடித்த டீசர்: இணையத்தில் வைரல்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நடித்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீஸரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ளார் 

தனுஷ் - ஐஸ்வர்யா வழக்கு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பட வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சூப்பர்ஹிட் இயக்குனரின் அடுத்த படத்தில் அருண் விஜய் வில்லனா? இன்று முதல் படப்பிடிப்பு!

 சமீபத்தில் சூப்பர் ஹிட் வெற்றிப்படம் கொடுத்த இயக்குநரின் அடுத்த படத்தில் 'யானை' என்ற சூப்பர் ஹிட் படத்தில் ஹீரோவாக நடித்த அருண் விஜய் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மரணத்திற்கு முந்தைய நாள் மரணம் குறித்து பதிவு செய்த பிரதாப் போத்தன்!

நடிகர் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தன் இன்று காலை காலமானார் என்ற செய்தி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு இயக்குனர் மணிரத்னம், நடிகர் கமல்ஹாசன்