விஜய் டிவி 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Friday,March 29 2024]

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை உலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ’தமிழும் சரஸ்வதியும்’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அக்ஷிதாவுக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரீதம் சுரேஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது

இது குறித்த புகைப்படங்கள் இருவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்துள்ள நிலையில் விரைவில் தம்பதிகள் ஆகப்போகும் அக்‌ஷிதா-பிரீதம் சுரேஷுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது

தற்போது ’தமிழும் சரஸ்வதியும்’ என்ற சீரியலில் நடித்து வரும் அக்ஷிதா கடந்த 2017 ஆம் ஆண்டு ’அழகு’ என்ற சீரியலில் நடிகை ஆக அறிமுகமானார். அதன் பிறகு சில கன்னட திரைப்படங்களில் நடித்த அவர் மீண்டும் சீரியலுக்கு வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான ’கண்ணான கண்ணே’ சீரியலில் நடித்த அவர் அதன் பிறகு தற்போது ’தமிழும் சரஸ்வதியும்’ என்ற சீரியலில் மேக்னா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் தற்போது அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்பட உள்ளது.