7 மொழிகளில் ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் தமிழ் சீரியல்.. இதுதான் முதல் முறை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் சீரியல் முதல் முறையாக 7 மொழிகளில் ரீமேக் செய்யப்படுவதாக அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ’சிறகடிக்க ஆசை’ என்பதும் இந்த சீரியல் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக விறுவிறுப்பாக பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் தெரிந்தது.
அண்ணாமலை - விஜயா, முத்து - மீனா, மனோஜ் - ரோகிணி மற்றும் ரவி -ஸ்ருதி ஆகிய எட்டு முக்கிய கேரக்டர்கள் மற்றும் சில துணை கேரக்டர்களுடன் இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் ஒவ்வொரு வாரமும் இந்த சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழில் உருவாகிய ’சிறகடிக்க ஆசை’ சீரியல் ஏற்கனவே தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மொத்தம் நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுவதாக இந்த சீரியலில் முத்துவின் நண்பராக செல்வம் என்ற கேரக்டரில் நடித்துள்ள பழனியப்பன் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவி சீரியல் தமிழ் உள்பட மொத்தம் ஏழு மொழிகளில் ஒளிபரப்பாவது இதுதான் முதல் முறை என்றும் அவர் பெருமையாக குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments