3 ஆண்டுகளாக ஒளிபரப்பான  விஜய் டிவியின் முக்கிய சீரியல்.. திடீரென முடிவடைவதால் அதிர்ச்சி..

  • IndiaGlitz, [Wednesday,September 18 2024]

விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ஒரு முக்கியமான சீரியல் திடீரென நிறைவடைய போவதாக வெளியான தகவல், பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமாக பார்க்கிறார்கள். இந்த நிலையில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முத்தழகு தொடரும், கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக வரவேற்பைப் பெற்ற தொடராக உள்ளது. இப்போது, இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த வார இறுதியில் இந்த காட்சிகள் ஒளிபரப்பாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முத்தழகு தொடர் திடீரென நிறைவடைவது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் ஷோபனா நாயகியாக முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், அவருக்கு ஜோடியாக ஆஷிஷ் சக்கரவர்த்தி நடிக்கிறார். மேலும், வைஷாலி, லட்சுமி வாசுதேவன் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த முத்தழகு, நகரத்து பின்னணியில் உள்ள நாயகனை திருமணம் செய்துகொள்ளும் நிலையில், திருமணத்துக்குப் பிறகு அவள் எதிர்கொள்ளும் சவால்கள் தான் இந்த தொடரின் கதையாகும்.

More News

சன் டிவி சீரியலில் அறிமுகமாகும் தேசிய விருது பெற்ற இயக்குனர்.. அஜித்தின் 2 படங்களை இயக்கியவர்..!

அஜித்தின் இரண்டு படங்களை இயக்கிய, அதில் ஒன்றுக்காக தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் அகத்தியன் தற்போது சீரியல் நடிகராகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் 'கோட்' படத்தின் 13 நாள் வசூல்.. அதிகாரபூர்வமாக அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி..!

தளபதி விஜய் நடிப்பில் உருவான 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது, இப்படத்தின் 13 நாட்களின் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பாளர் அர்ச்சனா

மூன்று மாநிலங்கள், மூன்று கதைகள், பிரம்மாண்ட பான் இந்திய திரில்லர் திரைப்படம்

ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்  தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான

2025-ம் ஆண்டு ராசிபலன் : உங்கள் ராசிக்கு என்ன பலன்கள்..?

பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், வருகின்ற 2025-ம் ஆண்டில் நடைபெற உள்ள முக்கியமான கிரக பெயர்ச்சிகள் மற்றும்

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த விஜய்.. அமைச்சர் உதயநிதி கூறிய கமெண்ட்..!

நேற்று பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பெரியார் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.