close
Choose your channels

விஜய் டிவி 'நீ நான் காதல்' ஹீரோவுக்கு திருமணம்.. மணமகள் திரைப்பட நடிகை..!

Thursday, January 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் சின்னத்திரையில் இருக்கும் நட்சத்திரங்களை திருமணம் செய்து கொள்வார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் விஜய் டிவியில் ’நீ நான் காதல்’ என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர், சினிமா நடிகையை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல் ‘நீ நான் காதல்’. இந்த சீரியலில் பிரேம் ஜேக்கப் என்பவர் ஹீரோவாக நடித்து வருகிறார்

இந்த நிலையில் பிரேம் ஜேக்கப் கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஸ்வாசிகாவை காதலித்து வந்த நிலையில் தற்போது அவரை திருமணம் செய்து கொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் கேரளாவில் நடந்த இந்த திருமணத்திற்கு ஏராளமான திரையுலகினர் மற்றும் சின்ன திரையுலகினர் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகை ஸ்வாசிகா ‘வைகை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் அதன் பின்னர் ’கோரிப்பாளையம்’ ’சாட்டை’ ’அப்புச்சி கிராமம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாள திரைப்படங்களில், சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment