விஜய் டிவி 'நீ நான் காதல்' ஹீரோவுக்கு திருமணம்.. மணமகள் திரைப்பட நடிகை..!

  • IndiaGlitz, [Thursday,January 25 2024]

சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் சின்னத்திரையில் இருக்கும் நட்சத்திரங்களை திருமணம் செய்து கொள்வார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் விஜய் டிவியில் ’நீ நான் காதல்’ என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர், சினிமா நடிகையை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல் ‘நீ நான் காதல்’. இந்த சீரியலில் பிரேம் ஜேக்கப் என்பவர் ஹீரோவாக நடித்து வருகிறார்

இந்த நிலையில் பிரேம் ஜேக்கப் கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஸ்வாசிகாவை காதலித்து வந்த நிலையில் தற்போது அவரை திருமணம் செய்து கொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் கேரளாவில் நடந்த இந்த திருமணத்திற்கு ஏராளமான திரையுலகினர் மற்றும் சின்ன திரையுலகினர் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகை ஸ்வாசிகா ‘வைகை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் அதன் பின்னர் ’கோரிப்பாளையம்’ ’சாட்டை’ ’அப்புச்சி கிராமம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாள திரைப்படங்களில், சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

விஜய்யின் 'தளபதி 69' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார்? கசிந்த தகவல்..!

தளபதி விஜய் தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், 'கோட்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் என்பது

நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் திரில்லர்  'ஆத்மா': பர்ஸ்ட்லுக் ரிலீஸ்

KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா

பதான், ஜவான், டங்கி.. 2023ல் மூன்று மெகா வெற்றி கொடுத்த ஷாருக்கான்..!

'பதான்'- ஓராண்டு நிறைவு,  'ஜவான்' இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வசூல் செய்த படம் , இதயத்தை வருடும் கதையுடன் வெளியான 'டங்கி' திரைப்படத்துடன் 2023ஆம் ஆண்டை ஷாருக்கான் நிறைவு

அமைச்சர் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார்.. ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது யாரை?

சமீபத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவரை அவர் இளமையாக இருப்பதாகவும் அழகாக இருப்பதாகவும்

மாதவன் - ஜோதிகா படத்தின் டீசர் வெளியீடு.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் மாதவன் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த ஹிந்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதோடு இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.