முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் சீரியல்.. கிளைமாக்ஸ் படப்பிடிப்பின் நெகிழ்ச்சியான வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,September 08 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பான முக்கிய சீரியல் முடிவுக்கு வருவதை அடுத்து அந்த சீரியலின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பின் போது அதில் நடித்த நட்சத்திரங்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியாக அன்பை பரிமாறிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சன் டிவி மற்றும் விஜய் டிவியில் போட்டி போட்டுக் கொண்டு புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர் என்பதும் ஒரு சில ஒரு சில சீரியல்கள் திடீர் திடீரென முடித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் விஜய் டிவியில் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்று ’செல்லம்மா’. இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது.

இந்த சீரியலில் அர்னவ், சித்தார்த் என்ற நாயகன் கேரக்டரிலும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ஷிதா, செல்லமா என்ற கேரக்டரில் நடித்து வந்தனர். இந்த நிலையில் இந்த சீரியல் செப்டம்பர் 14ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சீரியலின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த நிலையில் இது குறித்த வீடியோவை இதில் நடித்த நட்சத்திரங்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவில் இந்த சீரியலில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியுடன் இருக்கும் காட்சிகள் உள்ளன.

இந்த நிலையில் திடீரென ’செல்லமா’ சீரியல் முடியப் போகிறது என்ற தகவல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

More News

நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க உதவி செய்யும் ரஜினி, கமல் :  கார்த்தி தகவல்

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த பொதுக்குழுவில் நடிகர் கார்த்தி கணக்கு வழக்குகளை சமர்ப்பித்து பொதுக்குழுவில் பேசினார்.

நடிகை தீபிகா படுகோன் வீட்டிற்கு வந்த தேவதை.. குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை தீபிகா படுகோன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'வேட்டையன்' படத்தில் மறைந்த பிரபல பாடகரின் பாடல்? ஏஐ டெக்னாலஜி பாடலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் மறைந்த பழம்பெரும் பாடகர் குரல் ஏஐ

அனுமதி கிடைத்துவிட்டது.. தடைகளை தகர்ப்போம்.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

விஜyயின் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதை அடுத்து விஜய் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஹீரோவாகும் பாலகிருஷ்ணா மகன்.. முதல் படமே சினிமாட்டிக் யுனிவர்ஸ்.. இயக்குனர் யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷக்னா ஹீரோவாக அறிமுகம் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.