சீட் பெல்ட் போட்டதால் உயிர் தப்பினேன்.. விபத்தில் சிக்கிய சீரியல் நடிகையின் வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,August 18 2023]

சன் டிவி, விஜய் டிவி ஆகியவற்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வரும் நடிகை சமீபத்தில் விபத்தில் சிக்கியதாகவும், சீட் பெல்ட் போட்டதால் உயிர் தப்பியதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’முத்தழகு’ சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’ஆனந்த ராகம்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை வைஷாலி. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை வைஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருநெல்வேலி அருகே காரில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்து குறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் ’தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென தான் சென்ற கார் விபத்தில் சிக்கியதாகவும் தான் சீட் பெல்ட் போட்டிருந்ததால் சிறிய அளவில் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை சீட் பெல்ட் மற்றும் காரில் ஏர்பேக் இல்லாமல் இருந்தால் இந்த விபத்தில் விபரீதம் ஆகி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே காரில் செல்லும் போது கவனமாக மெதுவாக செல்லுங்கள், கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் சீக்கிரம் குணமடைந்து விடுவேன் என்றும் தன்னை அக்கறையுடன் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

'கார்த்திகேயா 2' நிகில் நடிக்கும் அடுத்த படம்.. டைட்டில் அறிவிப்பு..!

கார்த்திகேயா 2' படத்தின் மூலம் புகழ்பெற்ற கதாநாயகன் நிகில், தனது 20வது படத்திற்காக இயக்குனர் பரத் கிருஷ்ணமாச்சாரி உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு 'சுயம்பு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

அஜித்தை எல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்? நடிகை கஸ்தூரியின் சர்ச்சை ட்விட்..!

'அஜித்தை எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்' என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'பிக்பாஸ் தமிழ் சீசன் 7': அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் விஜய் டிவி.. வைரலாகும் ட்வீட்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கும் என்று கூறப்பட்டது.

மீண்டும் வில்லனாக விஜய்சேதுபதி? இம்முறை ஹீரோ இந்த பிரபல நடிகரா?

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ஷாருக்கான் ஆகியோர்களின் படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, தற்போது அடுத்ததாக எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்த

தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்.. என்ன காரணம்?

தன்னை இயக்குனராக அறிமுகம் செய்த பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கு நன்றி தெரிவித்து ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.