கர்ப்பமாக இருக்கும்போதும் 'என்ஜாய் என்ஜாமி' பாடலுக்கு ஆட்டம் போட்ட சீரியல் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘பகல்நிலவு’ என்பதும் இந்த சீரியலில் உண்மையான காதலர்களான அன்வர் மற்றும் சமீரா முக்கிய வேடங்களில் நடித்ததை அடுத்து அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
‘றெக்கை கட்டி பறக்குது’ உள்பட பல சீரியல்களில் நடித்துள்ள சமீரா ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காதலர்களாக இருந்த அன்வர் மற்றும் சமீரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் சமீபத்தில் சமீரா தான் கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் மூலம் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சமீரா தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கர்ப்பமான இருக்கும் நிலையிலும் அவர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான ’என்ஜாய் என்ஜாமி’ பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com