close
Choose your channels

ஆண் நண்பருடன் நீச்சல்குளத்தில் பந்து விளையாடும் விஜய் டிவி சீரியல் நடிகை!

Tuesday, July 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தனது ஆண் நண்பருடன் நீச்சல்குளத்தில் பந்து விளையாடும் வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பல சீரியல்களில் ஒன்று ’காற்றின் மொழி’. ’ராஜா ராணி’ புகழ் சஞ்சீவ் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் நடித்த இந்த சீரியல் 485 எபிசோடுகள் ஓடியது என்பதும் சமீபத்தில்தான் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த சீரியலில் கண்மணி என்ற கேரக்டரில் கிராமத்து பெண்ணாக பிரியங்கா நடித்து இருந்தார் என்பதும் சஞ்சீவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் இந்த சீரியல் மூலம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமத்து பெண்ணாக இந்த சீரியலில் அவர் நடித்து இருந்தாலும் உண்மையில் பிரியங்கா, படுமாடர்ன் பெண்மணி என்பதும் அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் அவர் மாடர்ன் உடைகளில் தோன்றுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரியங்கா தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் பந்து விளையாடும் காட்சி உள்ளது. இந்த காட்சியை பார்த்த பலரும் அந்த ஆண் நண்பரை பிரியங்கா காதலிக்கிறார் என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment