விஜய் டிவி பிரபலம் சென்ற அரசு பேருந்து விபத்து.. இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,December 20 2022]

விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் பிரபல சீரியல் நடிகர் ஒருவர் அரசு பேருந்தில் சென்ற நிலையில் அந்த பேருந்து விபத்துக்குள்ளானதை அடுத்து அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் கூடிய பதிவு செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ’முத்தழகு’ என்பதும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. எந்த பிரச்சினை வந்தாலும் அதை தைரியமாக எதிர்த்து போராடும் பெண் கேரக்டரை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரியலில் கதாநாயகனாக ஆசிஷ் சக்கரவர்த்தி நடித்துள்ளார். இவரது மூர்த்தி என்ற கேரக்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஆசிஷ் சக்கரவர்த்தி சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார் என்பதும் அவ்வப்போது தான் நடித்து வரும் சீரியல் மட்டும் தனது தனிப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் அரசு பேருந்தில் பயணம் செய்ததாகவும் அப்போது அந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக அந்த பேருந்தில் இருந்த அனைவரும் சிறிய காயங்களுடன் தப்பி விட்டோம் என்றும் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனக்கு ஏற்பட்ட காயங்களையும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து கடவுளுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவை அடுத்து ஆசிஷ் சக்கரவர்த்தி விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.