ரியல் ஜோடி ஆன ரீல் ஜோடி.. விஜய் டிவி சீரியல் நடிகரின் நிச்சயதார்த்த புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தொலைக்காட்சி சீரியலில் ஜோடியாக நடிக்கும் நட்சத்திரங்கள் நிஜத்திலும் ஜோடியாகி வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக சரவணன் மீனாட்சி சீரியல் நடித்த செந்தில் - ஸ்ரீஜா, ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் - ஆல்யா மானசா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாற உள்ளதை அடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
’தவமாய் தவமிருந்து’ என்ற சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் பிரிட்டோ மற்றும் சந்தியா ராமச்சந்திரன் என்பது தெரிந்தது. இந்த சீரியலில் இருவரது கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் தற்போது இருவரும் நிஜத்திலும் இணைய உள்ளனர்.
’தவமாய் தவமிருந்து’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவரும் காதல் வயப்பட்டதாகவும், இதனை அடுத்து இரு தரப்பு பெற்றோர்கள் பேசி முடித்து திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மாதம் 25ஆம் தேதி நிச்சயதார்த்தம் ஆனதாக இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் பிரிட்டோ தற்போது ’ராஜா ராணி 2 ’ சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் சந்தியா ராமச்சந்திரன் ஒரு சில சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments