சொந்த ஊரில் பிரமாண்டமான வீடு கட்டிய விஜய் டிவி ராமர்..

  • IndiaGlitz, [Tuesday,December 06 2022]

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ராமர் தனது சொந்த ஊரில் புது வீடு கட்டி இருக்கும் நிலையில் இந்த வீட்டின் கிரக பிரவேசம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செந்தில்- ராஜலட்சுமி உள்பட பல விஜய்டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டனர்.

விஜய் டிவி பிரபலங்கள் பலர் தற்போது திரை உலகின் உச்சத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பாக சிவகார்த்திகேயன் சந்தானம் உள்ளிட்டோர் திரையுலகில் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் ராமர். இவரது காமெடி அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பதும் குறிப்பாக இவர் பெண் வேடமிட்டு செய்த காமெடிகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவி ராமர் தனது சொந்த ஊரான மதுரையில் புதிய வீடு கட்டியுள்ளார். பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் சமீபத்தில் நடந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் புதுமனை புகுவிழாவிற்கு கலந்து கொண்டவர்களுக்கு சிக்கன் மட்டன் பிரியாணி என விருந்து கொடுத்து ராமர் அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மனைவியுடன் சிபிராஜ் .. வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்

நடிகர் சிபிராஜ் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் தற்போது வைரலாகி வருகிறது. 

ஷாருக்கானுடன் இணையும் 2 தென்னிந்திய பிரபலங்கள்.. தயாரிப்பது யார் தெரியுமா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது 'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்தப் பக்கத்தில் இரண்டு தென்னிந்திய பிரபலங்கள்

'தளபதி 67' படத்தில் விஷாலுக்கு பதில் இவரா? நேற்றைய பூஜையில் கலந்து கொண்டதாக தகவல்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்தின் பூஜை நேற்று நடைபெற்றதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. முதல் கட்டமாக இந்த படத்தின் டீசர்

சென்னையை விட்டு திடீரென கிளம்பிய ரம்யா பாண்டியன்.. என்ன காரணம்?

நடிகை ரம்யா பாண்டியன் தனது குடும்பத்துடன் சென்னையை விட்டு தனது சொந்த ஊருக்கு கிளம்பி உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

விஜய்சேதுபதியுடன் நடிக்க விரும்பிய பிரபல நடிகையின் மகள்!

விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என பிரபல நடிகையின் மகள் விருப்பம் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.