ஆரி குறித்து சர்ச்சையாக பதிவு செய்து நெட்டிசன்களிடம் சிக்கிய விஜய் டிவி பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஆரிக்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் ஆரி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ஆரி ரசிகர்களிடம் வசமாக சிக்கி உள்ளதாக தெரிகிறது.
எப்போதும் இல்லாத வகையில் இந்த சீசனில் விஜய் டிவி பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. விஜய் டிவியின் ஆதரவினால் தான் 70 நாட்களுக்கு மேலாக நிஷாவும், 90 நாட்களுக்கும் மேலாக ஷிவானி மற்றும் ஆஜித்தும் இறுதிப் போட்டியில் ரம்யா, கேபி மற்றும் ரியோ ஆகியோர் இருப்பதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பெரும்பாலான விஜய் டிவி பிரபலங்கள் தங்களுடைய சேனலை சேர்ந்த போட்டியாளர்களுக்கு வாக்களித்து ஆதரவு அளித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பாக ரியோவுக்கு ஓட்டு போட்டதை பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் டிவியின் மற்றொரு பிரபலமான ரக்சன், தனது சமூக வலைத்தளத்தில் ஆரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் ஆரிக்கு தனியார் வலைதளங்களில் வரும் வாக்குகள் எல்லாம் அதிகாரமற்றது என்றும் ஆரியின் பி.ஆர்.ஓ குழுவினரால் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் அவை போலியானது என்றும் பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவிற்கு ஆரியின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் ரக்சன் இது குறித்து விளக்கம் ஒன்றை கூறியுள்ளார். என்னுடைய முந்தைய பதிவு தவறுதலாக பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் எனக்கு ஒரு சிலர் போன் செய்து சொன்ன பிறகே அதை கவனித்ததாகவும் ஆரி அண்ணன் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று எந்தவித உள்நோக்கத்துடனும் அந்த பதிவு செய்யப்படவில்லை என்றும் அவரை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் யார் கூறினாலும் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout