ஒரு வயதில் விஜய் டிவி ரக்‌ஷன்: பக்கத்தில் இருக்கும் குட்டிப்பாப்பா யாரு தெரியுமா? 

  • IndiaGlitz, [Wednesday,May 26 2021]

விஜய் டிவியில் தொகுப்பாளர்களில் ஒருவரான ரக்‌ஷனை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கிய விதம் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ரக்சனை பலர் திருமணம் ஆகாதவர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த பல வருடங்களுக்கு முன்பே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதும் அவருடைய மனைவியின் புகைப்படம் சமீபத்தில் வெளிவந்து வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்றுமுன் ரக்சன் தான் ஒருவயதாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு வயதில் ரக்சன் இருக்கும் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் அருகில் ஒரு குட்டிப்பாப்பா இருக்கிறார் என்பதும் அவர் தான் ரக்சனின் சகோதரி என்பதையும் அவரே தெரிவித்துள்ளார்

ரக்சனுக்கு திருமணம் ஆனதே மிகவும் தாமதமாகத்தான் ரசிகர்களுக்கு தெரிந்த நிலையில் தற்போது அவருக்கு ஒரு அக்காவும் இருக்கிறார் என்பது ஆச்சரியமான தகவலாக ரசிகர்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரக்சன் மற்றும் அவரது சகோதரியும் இருக்கும் இந்த க்யூட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

சொந்த ஊரில் தடுப்பூசி எடுத்து கொண்ட இயக்குனர் இமயம்: வைரல் புகைப்படங்கள்!

கொரனோ வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க தடுப்பூசிக்கு அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்

தமிழகத்தில் உயரும் கருப்பு பூஞ்சை பாதிப்பு...! பாதுகாப்பாக இருங்க மக்களே....!

தமிழகத்தில் சுமார் 256 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

ரெக்கவர் செய்த ராஜகோபாலன் லேப்டாப்....! வெளியான அதிர்ச்சி தகவல்கள்...!

ராஜகோபாலன்  மாணவிகளிடம் எப்படி பாலியல் சீண்டல்களை தொடர்ந்தான் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிக்ஸர் அடித்த ஸ்டாலின்… ஊக்கத்தொகை அறிவிப்பு

தமிழக அரசு கொரோனா நேரத்தில் மக்கள் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஊக்கத் தொகையை அறிவித்தது.

யார் இந்த நுங்கம்பாக்கம் வசந்தி? PSBB பள்ளி விவகாரம் குறித்து குட்டிபத்மினியின் வைரல் வீடியோ!

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை குட்டிபத்மினி, நுங்கம்பாக்கம் வசந்தி குறித்து ஒரு தகவலை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.