விஜய் டிவி ரக்சனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த படம்.. முக்கிய அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவி ரக்சன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நடந்து வந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ’கன்னிவெடி’ என்ற திரைப்படத்தை அறிமுகம் இயக்குனர் கணேஷ் ராஜ் என்பவர் இயக்கி வருகிறார். சீன் ரோல்டன் இசையில், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில், மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் ’கன்னிவெடி’ படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு ரிலீஸ்க்கு பின்னர் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரகு தாத்தா’ திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் ’கன்னிவெடி’ படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.@KeerthyOfficial is on a mission and she won’t stop until she turns over the truth 📰#Kannivedi is coming soon on Netflix in Telugu, Tamil, Malayalam, Kannada after theatrical release!#NetflixPandigai@aganeshraj @RakshanVJ @madheshmanickam @RSeanRoldan @eforeditor… pic.twitter.com/GFKAPOeMsL
— DreamWarriorPictures (@DreamWarriorpic) January 17, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments