விஜய் டிவி புகழ் ஹீரோவாக நடிக்கும் 2வது படம்.. 'தோனி' பெயரில் டைட்டில்.. விஜய் சேதுபதி செய்த உதவி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவி புகழ் ஏற்கனவே ’மிஸ்டர் ஜு கீப்பர்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடிக்கும் இன்னொரு படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள நிலையில் தோனி பெயரில் உள்ள அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் புகழ் என்பதும் குறிப்பாக ’குக் வித் கோமாளி’ ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். மேலும்கடந்த சில ஆண்டுகளாக அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
‘கைதி’ ’சபாபதி’ ’வாய்மை’ ’யானை’ உள்ளிட்ட படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த புகழ் ’ஆகஸ்ட் 16 1947’ என்ற படத்தில் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் அதன் பின்னர் தற்போது ’மிஸ்டர் ஜு கீப்பர்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் டிவி புகழ் நடிக்கும் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்திற்கு ’டைமண்ட் தோனி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜோஜின் என்பவர் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை டைமண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. அபிஷேக் என்பவர் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Excited to unleash the title of Diamond Pictures Production No.1 - #DiamondDhoni, Best wishes to the entire team 👍@vijaytvpugazhO @JojinDir @SaneeshKal68433 @magaAnan @adithya_kathir @linga_offcl @SachinMaze @abhishekcsmusic@MuniezEditor @actionaamae @manshil_baburaj… pic.twitter.com/bPYLM6Ahla
— VijaySethupathi (@VijaySethuOffl) March 24, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments