கமல்-மாயா குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட விஜய் டிவி பிரபலங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,January 13 2024]

கமல் மற்றும் மாயாவை இணைத்து சர்ச்சைக்குரிய வகையில் காமெடி செய்த விஜய் டிவி பிரபலங்கள் இருவரும் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஜய் டிவி பிரபலங்களான புகழ் மற்றும் குரேஷி ஆகிய இருவரும் ஒரு காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் ’உங்களுக்கும் மாயாவுக்கும்’ என்று புகழ் கேட்கும் போது குரேஷி ’ஒன்றும் கிடையாது’ என்று கமல் குரலில் கூறுகிறார்.

சென்னையில் உங்களுக்கு பிடித்த இடம் எது? என்று புகழ் கேட்க அதற்கு குரேஷி ’மாயாஜால்’ என்று கூறுகிறார். உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? என்று கேட்க ’மாயா பஜார்’ என்று குரேஷி கூறுகிறார். உங்களுக்கு பிடித்த ஊர் எது? என்று கேட்க ’மாயவரம்’ என்று குரேஷி கூறுகிறார்.

பிக் பாஸ் போட்டியாளரான மாயாவுக்கு கமல் சப்போர்ட் செய்கிறார் என்பதை மறைமுகமாக குறிக்கும் வகையில் இந்த காமெடி அமைந்திருந்தது. இந்த காமெடி குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் கமல் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து புகழ் மற்றும் குரேஷி இருவரும் தனித்தனியாக வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளனர். இது ஒரு காமெடிக்காக செய்யப்பட்டது என்றும் கமல் மீது தங்களுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றும் தங்களது காமெடி கமல் ரசிகர்களை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது.