திருமண நாளில் நல்ல செய்தி சொன்ன விஜய் டிவி புகழ்.. ரசிகர்கள் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவி புகழ் தான் காதலித்த பென்சி என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று அவர் தனது முதல் திருமண நாளை கொண்டாடினார். இந்த நிலையில் அவர் முக்கிய செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் புகழ் என்பதும் தற்போது அவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் ஒரு திரைப்படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி விஜய் டிவி புகழ் மற்றும் பென்சி ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தது என்பது, இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் புகழ் - பென்சி தம்பதிகள் இன்று தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் பென்சி கர்ப்பமாக இருக்கும் நல்ல செய்தியையும் புகழ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் பென்சியின் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்... இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
விரைவில் பெற்றோர் ஆகப்போகும் புகழ்-பென்சி தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை❤️என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்... இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் #benziyapugazh pic.twitter.com/hbIZVeThxA
— vijaytvpugazh_official (@VijaytvpugazhO) September 1, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments