close
Choose your channels

ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு.. விஜய் டிவி புகழ் சந்தித்த உச்ச நட்சத்திரம்..!

Tuesday, September 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்திப்பது. அந்த தருணம் எனக்கு கிடைத்தது என்று விஜய் டிவி புகழ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது, அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பதும், அவருடைய படத்தில் அவருடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று திரையுலகில் உள்ள அனைவரும் விரும்புவார்கள் என்பது தெரிந்ததே

இந்நிலையில், விஜய் டிவியில் "குக் வித் கோமாளி" உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகழ், தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும், அவரும் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்களாக, ரஜினியை நேரில் சந்திக்க வேண்டும் என்று பல இடங்களில் புகழ் கூறிய நிலையில், அந்த சந்திப்பு தற்போது நிகழ்ந்துள்ளது. சமீபத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை, அவருடைய வீட்டில் புகழ் சந்தித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு தலைவரை நேரில் பார்ப்பது. அப்படி எனக்கு கிடைத்த தருணத்தில், அவ்வளவு இயல்பாகவும், எளிமையாகவும் பேசி பழகினார். மக்கள் அவரை எவ்வளவு உச்சத்தில் வைத்தாலும் அதனை தன் தலையில் கூட ஏற்றிக் கொள்ளாத மனிதர். அதனாலேயே அவர் என்றும் சூப்பர் ஸ்டார்...

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment