close
Choose your channels

அன்பு காட்டினா புலி கூட பசுதாங்க அய்யா... விஜய் டிவி புகழ் நடித்த 'ஜூகீப்பர்' டீசர்..!

Sunday, January 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகழ் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம்தான் ‘ஜூகீப்பர்’

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ்நாட்டு காட்டில் மூன்று குட்டிகளை ஒரு புலி ஈன்ற நிலையில் அதில் ஒரு புலி குட்டியை காணவில்லை. அதை தேடி வரும் வனத்துறையினர் புகழ் மீது அபாண்டமாக பழி போடுகின்றனர். அதனால் ஏற்படும் பிரச்சனைகள், சிறைவாசம் மற்றும் வழக்கை சந்திப்பது ஆகியவைதான் இந்த படத்தின் கதை என்பது தெரியவந்துள்ளது.

’அன்பு காட்டினால் புலி கூட பசு தாங்க அய்யா’ என புகழ் பரிதாபத்துடன் கூறும் வசனம், ’காடு எங்கே இருக்கு’ என காட்டை அழிப்பவர்கள் குறித்து ஆதங்கப்பட்டு புகழ் பேசும் வசனம் மனதை கவரும் வகையில் உள்ளது.

புகழ் ஜோடியாக ’நெஞ்சமுண்டு நேர்மையுடன்’, ‘வால்டர்’ மற்றும் ‘டிக்கிலோனா’ ஆகிய படங்களில் நடித்த ஷ்ரின் காஞ்ச்வாலா நடித்துள்ள இந்த படத்தில் சிங்கம் புலி, மாரிமுத்து, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் தன்வீர் மிர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment