விஜய் டிவி புகழ் வீட்டிற்கு வந்த மகாராணி.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Wednesday,September 27 2023]

விஜய் டிவி புகழ் மற்றும் அவரது நீண்ட கால தோழி பென்சி ஆகிய இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் அவரது மனைவி பென்சிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது என்பதும் அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் புகழ் தனது சமூக வலைதளத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்... மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள். என்மகளே ...தாயும் சேயும் நலம்

இதனை அடுத்து புகழ் மற்றும் பென்சி தம்பதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்