கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை.. ஆனால்.. செல்ல மகளுக்கு பெயர் வைத்த விஜய் டிவி புகழ்..!
- IndiaGlitz, [Friday,October 13 2023]
விஜய் டிவி புகழ் மற்றும் அவரது நீண்ட கால தோழி பென்சி ஆகிய இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில் சமீபத்தில் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இந்த குழந்தைக்கு பெயர் வைத்துள்ளதாக புகழ், தனது சமூக வலைத்தளத்தில் தனது மகளின் பெயரை அறிவித்தார். இது குறித்து அவர் பதிவு செய்து இருப்பதாவது:
என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ.. கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி... ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே
கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை..., இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, பு.ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே
எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம் என்பதை என் அன்பு உறவுகளுக்கு தெரிவித்து கொள்கிறேன்
இதனையடுத்து புகழ் மற்றும் அவரது மகளுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.