இன்னொரு முறையும் திருமணம் செய்ய தயார்: விஜய் டிவி புகழ் கொடுத்த விளக்கம்!

  • IndiaGlitz, [Sunday,September 04 2022]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகழ் சமீபத்தில் தனது நீண்டநாள் காதலி பென்சியாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணம் குறித்த புகைப்படங்கள் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தனது காதலி பென்சியாவை புகழ், ஒரு வருடத்திற்கு முன் ஏற்கனவே சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது நடந்த திருமணம் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்காக முறைப்படி நடந்த திருமணம் என்றும் பல ஊடகங்களில் செய்திகள் வெளியானது

இந்த செய்தியை அடுத்து புகழ் மீது நெட்டிசன்கள் கடும் விமர்சனம் வைத்த நிலையில் இரண்டாவது முறை திருமணம் செய்தது குறித்து நடிகர் புகழ் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

என் தந்தை அன்பிற்கு ஒரு முறை…
என் தாய் அன்பிற்கு ஒரு முறை…
என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை…
வேறு அன்பு உள்ளங்கள் ஆசை பட்டால்
மேலும் ஒரு முறை தயார் .
இந்தியனாக இருக்கிறேன்
எல்லா புகழும் இறைவனுகே

நடிகர் புகழின் இந்த பதிவு வைரலானது மட்டுமின்றி லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

மகளை படிப்பில் முந்திய மாணவன்: ஆத்திரத்தில் கொலை செய்த தாய்!

https://tamil.asianetnews.com/crime/the-student-s-parents-poisoned-the-cold-drink-of-a-student-who-excelled-in-studies-rhmtvv

சென்னையில் சினிமா தயாரிப்பாளர் கொலை: பிளாஸ்டிக் பையில் சாலையில் வீசப்பட்ட பிணம்!

சென்னையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவருடைய பிணம் பிளாஸ்டிக் பையில் போட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மணிரத்னம், சிம்பு, தனுஷ் படங்கள்.. செப்டம்பரில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் 8 படங்கள்!

செப்டம்பர் மாதத்தில் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' தனுஷ் நடித்த 'நானே வருவேன்' உள்பட 8 படங்கள் ரிலீசாக உள்ளதை அடுத்து சினிமா ரசிகர்களுக்கு

நயன்தாராவை திருமணம் செய்ததால் விக்னேஷ் சிவனுக்கு லக் கிடையாது: நடிகை ஸ்ரீநிதி

 சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி ஏற்கனவே அஜித்தின் 'வலிமை' படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து அஜித் ரசிகர்களின் கண்டங்களை பெற்றார். அதேபோல் சிம்புவை காதலிப்பதாகவும்

என்னுடைய படத்தின் ரீமேக்கில் நீங்கள் நடிக்க வேண்டாம்.. சிம்புவுக்கு கமல் கூறிய அறிவுரை!

என்னுடைய படத்தின் ரீமேக்கிலோ அல்லது நான் நடித்த படத்தின் இரண்டாம் பாகத்திலோ நீங்கள் நடிக்க வேண்டாம் என கமல் அறிவுரை கூறியுள்ளார்.