இன்னொரு முறையும் திருமணம் செய்ய தயார்: விஜய் டிவி புகழ் கொடுத்த விளக்கம்!
- IndiaGlitz, [Sunday,September 04 2022]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகழ் சமீபத்தில் தனது நீண்டநாள் காதலி பென்சியாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணம் குறித்த புகைப்படங்கள் வைரலானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தனது காதலி பென்சியாவை புகழ், ஒரு வருடத்திற்கு முன் ஏற்கனவே சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது நடந்த திருமணம் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்காக முறைப்படி நடந்த திருமணம் என்றும் பல ஊடகங்களில் செய்திகள் வெளியானது
இந்த செய்தியை அடுத்து புகழ் மீது நெட்டிசன்கள் கடும் விமர்சனம் வைத்த நிலையில் இரண்டாவது முறை திருமணம் செய்தது குறித்து நடிகர் புகழ் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
என் தந்தை அன்பிற்கு ஒரு முறை…
என் தாய் அன்பிற்கு ஒரு முறை…
என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை…
வேறு அன்பு உள்ளங்கள் ஆசை பட்டால்
மேலும் ஒரு முறை தயார் .
இந்தியனாக இருக்கிறேன்
எல்லா புகழும் இறைவனுகே
நடிகர் புகழின் இந்த பதிவு வைரலானது மட்டுமின்றி லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.