'அடையாறுல உனக்கு ஒரு பங்களா வாங்கி தர்றேன்: வருங்கால மனைவிக்கு வாக்குறுதி அளித்த புகழ்!

  • IndiaGlitz, [Monday,August 29 2022]

விஜய் டிவி புகழ் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி தனது நீண்டநாள் காதலி பென்சியாவை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் தனது வருங்கால மனைவிக்கு அடையாறில் பங்களா வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

புகழ் மற்றும் பென்சியா திருமணம் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற இருப்பதாக புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பாக ப்ரிவெட்டிங் போட்டோஷூட் எடுத்து அதனை இணையதளங்களில் பகிர்ந்து வரும் புகழ், சற்று முன் தனது வருங்கால மனைவியுடன் எடுக்கப்பட்ட ஜாலியான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர், ‘உனக்கு அடையாறில் ஒரு பங்களா வாங்கி தருகிறேன் என்றும் அந்த பங்களாவை பொருத்தவரை நான் தான் ராஜா, நீதான் மகாராணி என்றும் கூறும் காமெடி காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பத்து தல' படத்தின் மாஸ் அப்டேட் தந்த 'அசுரன்' நடிகர்!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் இந்த படப்பிடிப்பில் சிம்பு உள்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. 

விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாவை விட அதிக சம்பளமா? 'பொன்னியின் செல்வன்' நடிகர் குறித்த வதந்தி!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நடிகருக்கு அந்த படத்தில் மற்ற கேரக்டர்களில் நடித்த விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய் ஆகியோர்களை விட அதிக சம்பளம்

பெங்களூரூவிலும் அசத்திய 'கோப்ரா' படக்குழு

சீயான் விக்ரம் நடிப்பில் தயாரான 'கோப்ரா' படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அப்பட நாயகன் சீயான் விக்ரம் தலைமையிலான குழுவினர், பெங்களூரூக்கு சென்றனர்

ரூ.100 கோடி வசூலை நெருங்குகிறதா தனுஷின் 'திருச்சிற்றம்பலம்'? இதோ முழு விபரங்கள்!

 தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது வாரமாக நல்ல வசூலைப் பெற்று வருகிறது. 

ஹீரோவின் திமிர்ப்பேச்சால் தான் படம் ஓடவில்லை: தியேட்டர் அதிபர் காட்டம்!

சமீபத்தில் வெளியான விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' என்ற திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சால்