'அடையாறுல உனக்கு ஒரு பங்களா வாங்கி தர்றேன்: வருங்கால மனைவிக்கு வாக்குறுதி அளித்த புகழ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவி புகழ் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி தனது நீண்டநாள் காதலி பென்சியாவை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் தனது வருங்கால மனைவிக்கு அடையாறில் பங்களா வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
புகழ் மற்றும் பென்சியா திருமணம் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற இருப்பதாக புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பாக ப்ரிவெட்டிங் போட்டோஷூட் எடுத்து அதனை இணையதளங்களில் பகிர்ந்து வரும் புகழ், சற்று முன் தனது வருங்கால மனைவியுடன் எடுக்கப்பட்ட ஜாலியான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர், ‘உனக்கு அடையாறில் ஒரு பங்களா வாங்கி தருகிறேன் என்றும் அந்த பங்களாவை பொருத்தவரை நான் தான் ராஜா, நீதான் மகாராணி என்றும் கூறும் காமெடி காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments