close
Choose your channels

விஜய் டிவி புகழ் நாயகனாக நடித்த 'மிஸ்டர் ஜூ கீப்பர்'.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Tuesday, April 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகழ் தற்போது சில படங்களில் நகைச்சுவை நடிகராகவும் ஓரிரு படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் புகழ் நாயகனாக நடித்த முதல் படமான ’மிஸ்டர் ஜூட் கீப்பர்’ என்ற படம் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி புகழ் நடித்த ‘மிஸ்டர் ஜு கீப்பர்’படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் புலி ஒன்று மூன்று குட்டிகளை ஈன்ற நிலையில் அதில் ஒரு புலிக்குட்டியை காணவில்லை என்று வனத்துறையினர் தேடி வரும் நிலையில் புகழ் மீது அபாண்டமாக பழி விழுகிறது. அதனால் ஏற்படும் பிரச்சனைகள், சிறைவாசம் மற்றும் அதிலிருந்து புகழ் எப்படி தப்பினார் என்பது தான் இந்த படத்தின் கதை

இந்த படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது

நீண்ட நாள் காத்திருப்பு... மே 3ம் தேதி ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம் வெளிவர உள்ளது. முதன்முறையாக திரையில் கதையின் நாயகனாக தோன்ற உள்ளேன்.... என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் அனைவருக்கும் நன்றி... என்று தெரிவித்துள்ளார்.

புகழ் ஜோடியாக ’நெஞ்சமுண்டு நேர்மையுடன்’, ‘வால்டர்’ மற்றும் ‘டிக்கிலோனா’ ஆகிய படங்களில் நடித்த ஷ்ரின் காஞ்ச்வாலா நடித்துள்ள இந்த படத்தில் சிங்கம் புலி, மாரிமுத்து, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் தன்வீர் மிர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் என்பவர் இயக்கி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment