விஜய் டிவி பிரியங்காவா இவர்? சில வருடங்களுக்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்கள்!

விஜய் டிவி தொகுப்பாளினி என்றதும் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். அவருக்கு அடுத்து விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினியாக தற்போது இருந்து வருபவர் பிரியங்கா என்பதும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவியில் கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக பிரியங்கா ’ஒல்லிபெல்லி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஈரோடு மகேஷுடன் பிரியங்கா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அந்த புகைப்படத்தில் பிரியங்கா, அந்த நிகழ்ச்சியின் டைட்டில் போலவே ஒல்லியாக இருப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து, ‘நம்ம பிரியங்காவா இவர்? என கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மைனா நந்தினி, மாகாபவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வரும் நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் முடிந்தவுடன் மீண்டும் பிரியங்கா, விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.