நான் உங்களுக்கு என்ன செய்தேன்? கண்கலங்கிய விஜய்டிவி பிரியங்கா

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் பிரியங்கா தனது சமூக வலைத்தளத்தில் நான் உங்களுக்கு என்ன செய்தேன்? நீங்கள் ஏன் இவ்வளவு என் மேல் அன்பு காட்டுகிறீர்கள்? என்று கண்கலங்கி வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா. சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் மா.கா.ப ஆனந்த் உடன் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரியங்கா சமீபத்தில் மலேசியா சென்ற போது அவருக்கு அந்நாட்டு மக்கள் அளித்த அன்பு அவரை கண்கலங்க வைத்துள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘மலேசிய மக்கள் காட்டிய அன்பால் நெகிழ்ந்து போனேன். அவர்களுக்கு நான் என்ன செய்தேன்? எதற்காக அவர்கள் என்மீது இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள்? என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதே தவறு என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் எனக்கு முழு அளவில் ஆதரவு கொடுத்தது மலேசிய மக்கள் தான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். என்னை பார்க்க ஏராளமானோர் அங்கு கூடி இருந்தது, என்னை பார்த்ததும் கையசைத்தது, எனக்கு வாழ்த்து தெரிவித்தது ஆகிவற்றை பார்த்து நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். மலேசிய மக்களுக்கு எனது நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த வீடியோவையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது