தனது நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த விஜய் டிவி பிரியங்கா.. யார் இவர்?

  • IndiaGlitz, [Wednesday,February 01 2023]

விஜய் டிவி பிரியங்கா தனது நண்பரை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்பட ஒருசில நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே. பிரியங்காவுக்கு என ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும் நிலையில் பிரியங்கா தனது சமூக வலைதளத்தில் ஆண் நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, அவரை கட்டிப்பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த பிறந்தநாள் வாழ்த்து பதிவில், ‘என்னை என்றும் பாதுகாக்கும் தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீங்கள் எனக்கு வாழ கற்றுக் கொடுத்தீர்கள், அதற்கு நன்றி, உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணிபுரியும் இந்த நபர் யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More News

பெற்றோர் ஆன அட்லி-ப்ரியா அட்லி.. என்ன குழந்தை தெரியுமா?

 தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லியின் மனைவி ப்ரியா அட்லி கர்ப்பமாக இருந்த நிலையில் சற்றுமுன் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

21 வருடங்களுக்கு முன் நான் பார்த்த அதே விஜய்; 'தளபதி 67' படத்தில் இணைந்த பிரபலம்!

தளபதி விஜய் நடித்துவரும் 'தளபதி 67' படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 

சிம்பு பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிம்பு நடிப்பில்  உருவாகிய 'பத்து தல'  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும்

இது லிஸ்ட்லயே இல்லையே... தளபதி 67' படத்தில் இவருமா? அதிரடி அறிவிப்பு

 தளபதி விஜய் நடித்துவரும் 'தளபதி 67' படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது என்பதும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு அறிவிப்பு வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர்களில்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த ஒருசில நாட்களில் ஷிவினுக்கு கிடைத்த வாய்ப்பு.. ரசிகர்கள் வாழ்த்து..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பிடித்த ஷிவினுக்கு தற்போது விஜய் டிவி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.