'ரெடி ஸ்டெடி போ': ஸ்டார் விஜய்யின் பிளாக்பஸ்டர் கேம்ஷோ
Send us your feedback to audioarticles@vaarta.com
ஸ்டார் விஜய் சேனலில் அவ்வப்போது புதிய ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 'ரெடி ஸ்டெடி போ' என்ற புதிய சீசன் தொடங்க உள்ளது. ஜூன் 11 ஞாயிறு முதல் இந்த ஷோ தொடங்க இருப்பதாகவும் ஒவ்வொரு வாரமும் மதியம் 1.30 மணிக்கு இந்த ஷோவை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேடிக்கையான சுற்றுகளுடன் போட்டியாளர்களாக இளம் பெண்கள் கலந்து கொள்ள இருக்கும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி புகழ் விஷால் தொகுத்து வழங்குகிறார். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் என்ற கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 'கலக்கப்போவது யாரு' ரக்சனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சி 3 சுற்றுக்களுடன் ஒன்றை மணி நேரம் ஒளிபரப்பாகும் என்பதும் ஒவ்வொரு சுற்றுக்கும் இரு அணியிலிருந்து ஒருவரோடு ஒருவர் போட்டியிடுவார் என்பதும் அதிகபட்ச புள்ளிகள் உடன் வெற்றி பெறும் அணி மிகப்பெரிய பரிசுகளை வெல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுவாராசியமாக உள்ள இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 11 முதல் ஒளிபரப்பாக இருப்பதை அடுத்து இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஆரம்பமே அமோகமா இருக்கே 🤣 #ReadySteadyPo - இன்று மதியம் 1:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RSP #VijayTelevision #VijayTV pic.twitter.com/8VwDIE6r6K
— Vijay Television (@vijaytelevision) June 11, 2023
இவைங்க attrocity-க்கு அளவே கிடையாது 😂 #ReadySteadyPo - வரும் ஞாயிறு மதியம் 1:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. 😎😍 #RSP #VijayTelevision #VijayTV pic.twitter.com/c7QrzZihtC
— Vijay Television (@vijaytelevision) June 15, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments