close
Choose your channels

விஜய் டிவி சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.. இவருக்கு பதில் இவர் யார்?

Friday, September 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் இருந்து பிரபல நடிகை விலகி உள்ள நிலையில் அவருக்கு பதில் நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் அதில் ஒன்று ‘நீ நான் காதல்’ என்ற தொடர் என்பது பலர் அறிந்ததே. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது இந்த தொடரில் பிரேம் ஜேக்கப், வர்ஷினி சுரேஷ், சங்கரேஷ் குமார், நவீன் முரளிதரன், சாய் காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

தெலுங்கு சீரியலின் ரீமேக் சீரியல் ஆன இந்த சீரியல் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் அனு என்ற கேரக்டரில் நடித்து வரும் சாய் காயத்ரி திடீரென விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அந்த பதிவில் ’எதிர்பாராத விதமாக தனக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டதை அடுத்து இந்த தொடரில் இருந்து விலகுவதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். கடவுள் அருள் மற்றும் உங்களுடைய அன்பு கலந்த ஆதரவுடன் நான் உங்களை மீண்டும் சந்திப்பேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

’நீ நான் காதல்’ தொடரிலிருந்து சாய் காயத்ரி விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகை அஷ்ரிதா இருப்பதாக தெரிகிறது. இவர் ’தமிழும் சரஸ்வதியும்’ ’தேன்மொழி பிஏ’ ‘சொந்த பந்தம்’ ’கல்யாண பரிசு’ ’நாம் இருவர் நமக்கு இருவர்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment