close
Choose your channels

ஒரே இடத்திற்கு சுற்றுலா சென்று மாட்டி கொண்ட விஜய் டிவி காதலர்கள்.. வைரல் வீடியோ..!

Monday, February 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி பிரபலங்கள் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் ஒரே இடத்திற்கு சுற்றுலா சென்ற வீடியோவை தனித்தனியாக வெளியிட்டு மாட்டிக் கொண்டதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ’பாரதி கண்ணம்மா’ என்பதும் இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’பாரதி கண்ணம்மா’ முதல் பாகத்தின் நாயகன் அருண்பிரசாத் சமீபத்தில் சுற்றுலா சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் கிட்டத்தட்ட அவர் சென்ற அதே இடத்திற்கு விஜே அர்ச்சனாவும் சுற்றுலா சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இரண்டு வீடியோக்களிலும் இருக்கும் காட்சிகள் ஒரே இடம் தான் என்பதை நெட்டிசன்கள் உறுதி செய்துள்ளதை அடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்துதான் சுற்றுலா சென்று உள்ளார்கள் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே அருள்பிரசாத் மற்றும் விஜே அர்ச்சனா இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டாலும் பகிரங்கமாக இன்னும் காதலை தெரிவிக்காத நிலையில் தற்போது இருவரும் ஒரே இடத்திற்கு சுற்றுலா சென்றதன் மூலம் அவர்களது காதல் வெளிப்பட்டு விட்டதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் தங்களுடைய காதலியை காதலை வெளிப்படையாக விரைவில் தெரிவிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment