நிஜ வாழ்வில் ஜோடி சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. திருமண வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தால் பொருளாதார ரீதியாக கார், வீடு வாங்கி செட்டில் ஆவது மட்டுமின்றி வாழ்க்கை துணையும் செட்டில் ஆகிவிடும் என்பதை பல ஜோடிகள் திருமணம் செய்து கொண்டதை பார்த்திருக்கின்றோம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு விஜய் டிவி காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று ’கனா காணும் காலங்கள்’. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிக் டாக் மூலம் பிரபலமான தீபிகா என்பவர் இந்த சீரியலில் அபி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அதே போல் டிக் டாக் மூலம் பிரபலமான ராஜ் வெற்றி பிரபு என்பவர் இந்த சீரியலில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் தீபிகா மற்றும் ராஜ் வெற்றி பிரபு தங்கள் காதலை அறிவித்த நிலையில் தற்போது இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் இரு வீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தீபிகா-வெற்றி திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ள நிலையில் ரசிகர்கள் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments