விஜய் டிவியின் இந்த டுவீட் தேவையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு பங்கேற்பாளர் வெளியேறுவது தெரிந்ததே. வெளியேறும் நபர் யார் என்பது நேயர்கள் பதிவு செய்யும் ஓட்டுக்களை பொறுத்து அமைந்து வருகிறது. யார் அதிக ஓட்டுக்கள் வாங்குகிறார்களோ அவர்கள் உள்ளேயும், குறைவான ஓட்டுக்கள் வாங்குவது வெளியேறுவதும் அனைவரும் அறிந்ததே.
இந்த ஓட்டு போடும் படலம் கடந்த நான்கு வாரங்களாக நடந்து கொண்டு வரும் நிலையில் வழக்கமாக ஓட்டு போடுபவர்களுக்கு விதிமுறைகள் அனைத்தும் தெரியும். இந்த நிலையில் நேற்று விஜய்டிவியின் சமூக வலைத்தளத்தில் 'மக்களே ஞாபகம் வச்சிக்கோங்க! நீங்க போடுற ஒவ்வொரு ஓட்டும் வீட்டிற்குள் இருக்கவைப்பதற்கு!! என்ற டுவீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தனை வாரங்களாக ஓட்டு போடும் நேயர்களுக்கு இது தெரியாதா? திடீரென இந்த டுவீட் ஏன் என்று சமூக வலைத்தள பயனாளிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கிட்டத்தட்ட 80% ஓட்டுக்கள் ஓவியாவுக்கும், 15% வையாபுரிக்கும், 5% மட்டுமே ஜூலிக்கும் வாக்குகள் கிடைத்திருப்பதாக தகவல் வந்த நிலையில் விஜய்டிவியின் இந்த டுவீட் ஓட்டு போடுபவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஜூலிக்கு ஆதரவாகவே இந்த டுவீட் அமைந்துள்ளதாகவும் பலர் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே என்ன நடக்க போகின்றது என்பதை வரும் சனி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
மக்களே ஞாபகம் வச்சிக்கோங்க! நீங்க போடுற ஒவ்வொரு ஓட்டும் வீட்டிற்குள் இருக்கவைப்பதற்கு!! @Vivo_India #BiggBossTamil #VivoBiggBoss
— Vijay Television (@vijaytelevision) August 1, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com